இந்திய அணியின் வெற்றியில் தமிழக வீரர்களின் பங்கு சிறப்பானது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் மகத்தான வெற்றிப்பெற்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் "பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது" என பதிவிட்டு அதில் அஸ்வின், நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரை டேக் செய்துள்ளார் அவர்.
திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "ஆஸ்திரலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரு குழுவாக அணியுணர்வுடன் செயல்பட்டால் எப்படி வெற்றிப்பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தது கடைசிப் போட்டி. இளம் வீரர்களின் ஆட்டத்திறன் பிரம்மிக்க வைத்தது" என பதிவிட்டுள்ளார்.