பாகிஸ்தான் வீரர் ஆசீம் ரஃபிக், யார்க்ஷையர் கிளப்பிடம் இருந்து இனவாத சம்பவங்களை எதிர்கொண்டதாகவும், அது அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பேசியுள்ளார்.
இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஆசீம் ரஃபிக், தன் மீது இனவாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது ”நான் யார்க்ஷையர் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்த போது, நான் தற்கொலைக்கு மிக அருகில் சென்று விட்டேன். நான் எனது குடும்பத்தின் ஆசைக்காகவே கிரிக்கெட்டராக மாறினேன். எனது மனிதின் உள்ளே ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருந்தேன். நான் வேலைக்குச் செல்வதற்கே பயந்தேன்.
யார்க்ஷையர் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது நிறுவனத்திடம் இருந்து இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டேன். அங்கிருந்த ஒரு பயிற்சியாளர் கூட என்னை போன்ற பின்னணியில் இருந்து வரவில்லை. அதனால் அவர்கள் என்னைப் புரிந்துகொள்ள வில்லை. அதன் பிறகுதான் எனக்கு புரிய வந்தது அது ஒரு நிறுவன இனவாதம் என்று. அவர்கள் அதனை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. நான் முஸ்லீமாக மாறுவதற்கு என்னென்ன விஷயங்களை செய்து என்னை அதில் புகுத்திக்கொள்ள முடியுமோ அவையனைத்தையும் செய்தேன். அந்தக் நினைவுகளை நான் மறக்கவே விரும்புகிறேன். ஆனால் விரைவில் அதனை நிறுத்தப் போகிறேன். நான் மாறுபட்டவனாக இருக்கிறேன்.” என்றார்