விளையாட்டு

இனவெறி ரீதியாக வீரர்களை சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் காட்டம்

இனவெறி ரீதியாக வீரர்களை சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் காட்டம்

EllusamyKarthik

யூரோ கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, இத்தாலியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணி வீரர்களை சமூக வலைத்தளங்களில் சிலர் இனவெறி ரீதியாக சாடி இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களை இனவெறி ரீதியாக வீரர்களை சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். 

“இந்த இங்கிலாந்து அணியின் வீரரர்களை கதாநாயகர்கள் போல கொண்டாடப்பட வேண்டுமே தவிர அவர்களை இனவெறி ரீதியாக சாடக்கூடாது. வீரர்களை இது போல சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்” தெரிவித்துள்ளார் அவர். 

பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடிக்க, மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகிய மூவரும் அடித்த கோல்களை இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார்.

கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள் என்பதால், தோல்விக்கு இந்த 3 வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறிப் பதிவுகளை இடத் தொடங்கினர். இப்பதிவுகள்தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.