தொடர் தோல்வி காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திசாரா பெரேரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியுடன் இலங்கையில் நடந்த தொடரில் படு மோசமாக தோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. பின்னர் இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியையே தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், மேத்யூஸ் அல்லது தற்போதைய டெஸ்ட் கேப்டன் சண்டிமால் ஆகியோரில் ஒருவர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அணியின் தொடர் தோல்வி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான், கேப்டன் பொறுப்பை விட்டு மேத்யூஸ் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.