மும்பையில் பாலிவுட் நடிகர்களின் நடனத்துடன் ஐபிஎல் தொடக்க விழா கலைகட்டியது.
ஐ.பி.எல் கிரிக்கெட் 11வது சீஸன் போட்டிகள் இன்று கோலகலமாக தொடங்கின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன், வருண் தவான் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடனமாடினார்கள். முன்னதாக ‘பாகுபலி’ பாடலுடன் தமன்னா அறிமுகமாக, ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர். பிரபுதேவா நடனத்தின் போது தமிழ்ப் பாடலும் ஒலிக்கப்பட்டது பின்னர் இரவு இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன், பிராவோ, இம்ரான் தாகீர், மார்க் வுட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.