விளையாட்டு

இலங்கை மண்ணில் முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

webteam

கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 ரன்களும்‌ இலங்கை அணி 183 ரன்களும் எடுத்தன. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான இன்று 92 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த கருணாரத்னே சதமடித்தார். 141 ரன்களில் அவர் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணியின் இரண்டாவது‌ இன்னிங்ஸ், 386 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் என கைப்பற்றியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ரவீந்தர ஜடேஜா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.