விளையாட்டு

"இப்போதும் என்னை தோல்வி வாட்டுகிறது"-விராட் கோலி

"இப்போதும் என்னை தோல்வி வாட்டுகிறது"-விராட் கோலி

jagadeesh

உலகக் கோப்பை அரையிறுதியில் பெற்ற தோல்வி இப்போதும் தன்னை வாட்டுவதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர் "உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வி இப்போதும் என்னை வாட்டுகிறது. எனினும் இதற்காக நியூசிலாந்து அணியை பழிதீா்க்கும் எண்ணம் எழவில்லை. மைதானத்தில் போட்டி மனப்பான்மையோடு களமிறங்க தயாராக உள்ளோம். முன்னா் கூறியவாறு மற்ற அணிகள் எவ்வாறு ஆட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவா்கள் நியூஸி அணியினர். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் தோற்றபோதும், மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொண்டனா்"

மேலும் தொடர்ந்த கோலி " உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் நியூஸி அணியினா் பலமானவா்களாக இருப்பார்கள். எனவே அவர்களை எளிதாக எண்ணிவிட மாட்டோம். ராகுல், பேட்டிங்-விக்கெட் கீப்பிங் என இரண்டு வகையில் செயல்படுவது மிகவும் சாதகமாக உள்ளது. கூடுதல் பேட்ஸ்மேனை களமிறக்கவும் முடியும். டி20 ஆட்டத்தைப் பொருத்தவரை ஏராளமான வீரா்கள் தயாராக உள்ளனா். தவான் காயத்தில் இருந்து குணமடைந்து வந்தால் மேலும் சிறப்பாக விளையாடுவோம்" என்றார் அவர்.