விளையாட்டு

இவர்கள் "சென்னை சூப்பர் குயின்"கள் ! பேஸ்ஆப் சேட்டை

இவர்கள் "சென்னை சூப்பர் குயின்"கள் ! பேஸ்ஆப் சேட்டை

jagadeesh

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்களை "பேஸ்ஆப்" செயலி மூலம் குயின்களாக மாற்றி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அதன் நிர்வாகம்.

கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் "பேஸ்ஆப்" என்ற செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தச் செயலியை வைத்து ஆண்களின் முகத்தைப் பெண்ணாகவோ, பெண்ணின் முகத்தை ஆணாகவோ மாற்றிக்கொள்ளலாம். இது மிகவும் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் பலரும் அதனைப் பயன்படுத்தி தங்களது மாற்றுத் தோற்ற புகைப்படத்தை பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சாஹல், சக வீரர்களைக் கிண்டலடிப்பதில் வல்லவர். அதுவும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை, பெண்ணாக மார்பிங் செய்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை ரோகித் சர்மாவுக்கு டேக் செய்து " ரோகித் ஷர்மா… நீங்க செம க்யூட்டாக இருக்கிறீர்கள்" என்று கேலியாகப் பதிவிட்டார்.

முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அண்மையில் பேஸ் ஆப் செயலி மூலமாக தற்போது உள்ள இந்திய அணி வீரர்களான தோனி, விராட் கோலி, புவனேஷ்குமார், சாஹல் உள்ளிட்ட வீரர்களை பெண் வடிவத்தில் மாற்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். மேலும் இதில் நீங்கள் யாரைப் தோழியாக ஏற்க விருப்பப்படுகீறீர்கள் என்று அவரைப் பின் தொடர்பவர்களுக்கு ஒரு கேள்வியையும் முன்வைத்தார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேஸ்ஆப் செயலி மூலம் வீரர்களை பெண்களாய் மாற்றி பதிவிட்டுள்ளது. மேலும் அதில் "எங்களுடைய காதல் சென்னை சூப்பர் குயின்களான உங்களைச் சேரும்" என கேலியாக பதிவிட்டுள்ளது. இதில் தோனி, வாட்ஸசன், பிராவோ ஜடேஜா ஆகியோர் மிகச் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.