இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக பல போட்டிகளை வென்று கொடுத்தவர்.
இடதுகை பேட்ஸ்மேனான அவர் சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினமான இன்று அவருக்கு பிடித்த தலைசிறந்த நான்கு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாராட்டினை அவர் தெரிவித்துள்ளார்.
‘இந்த படத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு எனது வணக்கங்களும், பாராட்டுகளும். இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த இடதுகை பேட்ஸ்மேன்களின் பெயரையம் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மேத்யூ ஹேடன் ஆகியோர் யுவராஜின் தலைசிறந்த நான்கு இடதுகை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆக்டிவாக விளையாடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.