ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஷார்ஜாவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் 15 முறையும், பெங்களூரு 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஃபிளே ஆஃபிற்கான போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஐதராபாத் 7 முறையும், கொல்கத்தா 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ஐதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது. கொல்கத்தா அணி வாழ்வா சாவா கட்டத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.