தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. இதில், இந்திய வீரர் தோனி பங்குபெறுவாரா என்பது பற்றிய விவாதம் நடந்துவருகிறது. அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட்டை உலகக் கோப்பைக்கு தயார் படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘ உலகக்கோப்பை வரை தோனியின் இடத்தை யாராலும் மாற்ற முடியாது. அவர் இப்போது ரன் குவிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அவர் உலகக் கோப்பை வரை ’பிட்’டாக இருக்க வேண்டும் என்றே நாம் பிரார்த்திக்க வேண்டும். மிடில் ஆர்டர் மற்றும் அதற்கடுத்த நிலையில் ஆடும் அவரது அனுபவம் வேறு யாருக்கும் இல்லை. ரிஷாப் பன்ட் சிறந்த வீரர்தான். ஆனால் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. அவருக்கு இன்னும் அனுபவம் வேண்டும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்பே, தோனிக்கு மாற்று வீரர் பற்றி யோசிக்க வேண்டும்’ என்றார்.