விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் ’1000’ சிக்ஸ் : தொடரும் கிறிஸ் கெயிலின் ருத்ரதாண்டவம்! 

டி20 கிரிக்கெட்டில் ’1000’ சிக்ஸ் : தொடரும் கிறிஸ் கெயிலின் ருத்ரதாண்டவம்! 

EllusamyKarthik

டி20 கிரிக்கெட் என்றாலே எல்லோரது மனதிலும் சட்டென நினைவுக்கு வருபவர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தான். அதற்கு காரணம் அவரது ஆட்டம் அப்படி இருக்கும். 

டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

இது கெயில் படைத்த சாதனைகளின் மைல் கல் என்றும் சொல்லலாம். 

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கெயில் ராஜஸ்தான் உடனான இன்றைய ஆட்டத்தில் எட்டு சிக்ஸர்களை விளாசினார் கெயில். அதில் ராஜஸ்தான் அணியின் கார்த்திக் தியாகி வீசிய 19வது ஓவரில் கெயில் சிக்ஸ் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் பேட்ஸ்மேனும் கெயில் தான். 

சிக்ஸர் கணக்கை 1000 என சுருக்கி விடாமல் வளரும் வகையில் ஒற்றை இலக்கில் இருக்கட்டுமே என ஆர்ச்சர் வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து 1001 என கணக்கை உயர்த்தியுள்ளார். 

அதே போல நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 22 சிக்ஸர்களை கெயில் அடித்துள்ளார். 

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவரும் கெயில் தான். மொத்தமாக 13572 ரன்களை எடுத்துள்ளார். அதில் 10170 ரன்கள் பவுண்டரி மூலம் ஸ்கோர் செய்துள்ளார் கெயில். 

இதன் மூலாம் கிரிக்கெட் உலகின் UNIVERSE BOSS நான் தான் என்பதை நிரூபித்துள்ளார் கெயில்.