இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் ரசிகர்களால் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என அன்போடு அழைக்கப்படுபவர். அதற்கு கரணம் அவரது ஆட்டம்.
பதின் பருவ வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் சச்சினுக்கு மும்பையின் பேவரைட் சாட் உணவு வகைகளில் ஒன்றான ‘வடா பாவ்’ என்றால் கொள்ளை இஷ்டம்.
நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் வடா பாவை தானே தயாரித்துள்ளார் சச்சின். அப்போது அவரது வீட்டுக்கு அழையா விருந்தாளியாக ஒருவர் வந்ததாக சொல்லி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சச்சின்.
‘வடா பாவ் எப்போதுமே என் பேவரைட் டிஷ்களில் ஒன்று. எதிர்பாராத விதமாக நான் தயாரித்த வடா பாவில் ஒன்றை சாப்பிட விருந்தாளி ஒருவர் வந்துள்ளார். அவரை பார்க்க ஸ்வைப் செய்யவும்’ என அந்த போட்டோவிற்கு கேப்ஷன் போட்டிருந்தார்.
சச்சின் சொன்ன அந்த விருந்தாளி ஒரு பூனை என்பது தெரியவந்துள்ளது.
சச்சினின் இந்த போஸ்டிற்கு கமெண்ட் செய்த முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ‘எனக்கும் ஒன்று தயார் செய்து கொடுங்கள்’ என சொல்லியுள்ளார்.