மும்பை அணியுடனான முதல் போட்டியில் ஏழாவது பேட்ஸ்மேனாக 438 நாட்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த தோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
பும்ரா வீசிய அந்த பந்து தோனிக்கு இடது பக்கமாக சென்று கீப்பர் டிகாக்கை அடைந்தது. அதற்கு மும்பை வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவுட் கொடுத்தார்.
உடனடியாக எதிர்முனையில் நின்று கொண்டிருந்த டுபிளசிஸிடம் பேசிய தோனி அம்பயரின் முடிவை எதிர்த்து ரீவ்வியூ சென்றார்.
அதில் தோனியின் பேட்டில் பந்து படவே இல்லை என தெரிந்ததும் டிவி அம்பயர் களத்தில் நின்று கொண்டிருந்த அம்பயரின் முடிவை பின்வாங்கிக் கொள்ளும்படி தெரிவிக்க நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார் தோனி. டிஆர்எஸ் முறையை தோனி ரிவிவிவ் சிஸ்டம் என அவரது ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். அப்படி, தோனியின் கணிப்பு மற்றொரு முறை தவறாமல் இருந்துள்ளது என அவர் பாராட்டியுள்ளனர்.