விளையாட்டு

வீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை அடிமையாக்கிய பப்ஜி உருவான கதை?

kaleelrahman

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் ஈர்த்த பப்ஜி கேம் எப்படி உருவானது?


மிரளவைக்கும் கிராஃபிக்ஸ், அதிரவைக்கும் 3டி எஃபெக்ட், உயிர் காக்க உதவும் ஐடியாக்கள் என பல சுவாரஸ்யங்கள் நிறைந்த பப்ஜி கேமை 1976-ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரண்டன் கிரீன் என்பவர் கண்டுபிடித்தார். தனது சிறுவயதில் பெற்றோர்களின் கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரண்டன் கற்பனை உலகில் வாழத் தொடங்கினார். அந்த கற்பனை உலகை மையமாக வைத்தே பப்ஜி உருவாக்கப்பட்டது.


புகைப்பட கலைஞரான பிரிண்டன், காடுகளிலும், தீவுகளிலும் உள்ள விலங்குகளை வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒருகட்டத்தில் வேலை, குடும்பம் என அனைத்தையும் மறந்து விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது தனிமையான சூழலில் இருந்த பிரிண்டன் சிறு சிறு இணைய விளையாட்டுக்களை கண்டுபிடித்தார். அவரது கற்பனைத் திறனை கண்டு வியந்த சோனி நிறுவனம் அவருக்கு வேலை வழங்கியது.


ஒருநாள் கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஹான் கிம் என்ற முன்பின் அறியாத நபருடன் நட்பு ஏற்பட, இருவரும் இணைந்து உருவாக்கிய விளையாட்டே பப்ஜி. நடைமுறையில் சாத்தியபடாத ஒன்றை கண்முன்னே நிறுத்தி அனிமேஷனில் சாதனைப்படைத்த பப்ஜி, ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்தாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இளைஞர்கள் பலர் விபரீத முடிவுகளை எடுத்துள்ளனர்.

அதில் டெல்லியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் பப்ஜிக்கு அடிமையாகி தனது பெற்றோர்களை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பப்ஜி கேம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலனை பாதிக்கும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கூறிவந்தனர். இந்ந நிலையில் தான் தற்போது மத்திய அரசு பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது.