விளையாட்டு

தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை!

தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை!

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

புனேவில் இரவு‌ 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. சென்னை அணி நடப்புத் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, முதலிடத்தில் உள்ளது. நடப்புச் சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை இண்டியன்ஸ் அணி தயாராகி வருகிறது. வெற்றிப் பயணத்தை தொடரும் வேட்கையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களமிறங்குகிறது.

 இந்நிலையில், டோனி தற்போது கேப்டனாக புதிய சாதனை படைக்க உள்ளார்.  இதுவரை 149 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக சென்னை அணியை வழிநடத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் அவர் கேப்டனாக விளையாடினால் இது அவருக்கு 150வது ஐபிஎல் போட்டியாகும். இதன்மூலம் 150 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாட இருக்கும் முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைக்க உள்ளார். இது தவிர ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் 14 போட்டிகளில் டோனி கேப்டனாக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.