விளையாட்டு

தமிழ் வேண்டாம்; ஹிந்தி வேண்டும் என்றவருக்கு சென்னை அணி கொடுத்த பதிலடி

தமிழ் வேண்டாம்; ஹிந்தி வேண்டும் என்றவருக்கு சென்னை அணி கொடுத்த பதிலடி

webteam

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் சென்னை அணிக்கு ஆதரவு என்பது வழக்கம்போல் மாநிலங்கள் கடந்தும் காணப்படுகிறது. சென்னையில் போட்டி நடக்காது என்று அறிவித்தது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் தற்போதைய புள்ளி பட்டியலின்படி இரண்டாவது இடத்தில் சென்னை நீடிப்பதால் அனைத்து ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னை அணிக்கு என இருக்கும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சென்னை வீரர் பயிற்சி செய்யும் வீடியோ, மற்றும் போட்டி நடைபெறும் போது உடனுக்குடன் ரன் பற்றிய தகவல்கள் அதில் பதிவிடப்படும். இந்நிலையில் ரசிகர் ஒருவர்  ‘சென்னை அணிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது வேறு இடங்களிலும் ரசிகர்கள் உள்ளதால், தமிழில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம் அல்லது ஹிந்தயிலும் பதிவிடுமாறு ட்விட்டரில் கேட்டுகொண்டார். இதற்கு பதிலடி கொடுத்த சென்னை அணி நிர்வாகம் ‘ஆங்கிலம் சரி, ஆனால் ஹிந்தி... கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என ஹிந்தியிலே பதிலடி கொடுத்துள்ளது.