விளையாட்டு

‘தி ரியல் GOAT’ - கோலியை புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை கைனெத் இம்தியாஸ்

EllusamyKarthik

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக செயல்பட்டு வந்த விராட் கோலி, அண்மையில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். அது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பியது. பல்வேறு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலி குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கைனெத் இம்தியாஸ் (Kainat Imtiaz).

“அச்சமின்றி ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் களத்தில் கேப்டனாக களமாடியவர் விராட் கோலி. நாம் பார்த்த தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள்தான் தி ரியல் GOAT (வரலாற்றில் தலை சிறந்தவர்). ரியல் இன்ஸ்பிரேஷன்” என ட்வீட் செய்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அவுட்டானார் கோலி. அவர் கேப்டனாக இருந்ததை விட கேப்டனாக இல்லாத போது அவரது ஆட்டம் வேற லெவல் என சமூக வலைதளத்தை மீம்ஸ் போட்டு அதகளம் செய்து வருகின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.