விளையாட்டு

2022 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்று: கத்தாரில் இந்திய அணி முகாம்

EllusamyKarthik

2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாட கத்தாரில் முகாமிட்டுள்ளது கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி. வரும் 2022 இறுதியில் நடைபெற உள்ள காலபந்தாட்ட உலகக் கோப்பை தொடரில் ஆசிய அணிகள் பங்கேற்பதற்கான தகுதி சுற்று இது. கடந்த 2019-இல் இந்த தகுதிச் சுற்று போட்டிகள் கொரோனா பரவல் காரணமக தள்ளிவைக்கப்பட்டது. 

இந்திய அணி வரும் ஜூன் 3 அன்று கத்தார் அணியுடனும், ஜூன் 7 அன்று வங்கதேசத்துடனும், ஜூன் 15 அன்று ஆப்கானிஸ்தான் அணியுடனும் விளையாட உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஐந்து போட்டிகளில் இரண்டில் டிராவும், மூன்றில் தோல்வியும் தழுவி உள்ளது இந்திய அணி. 

பயோ செக்யூர் பபுளில் இந்த ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. 28 வீரர்கள் அடங்கிய இந்திய அணி தற்போது கத்தார் தோகாவில் உள்ளனர். 

அணி விவரம்... 

கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சந்து, அம்ரிந்தர் சிங், தீரஜ் சிங்.

தடுப்பாட்டக்காரர்கள் (Defenders) : பிரிதம் கோட்டல், ராகுல் பெக், நரேந்தர் கெஹ்லோட், சிங்லென்சனா சிங், சந்தேஷ் ஜிங்கன், ஆதில் கான், ஆகாஷ் மிஸ்ரா, சுபாஷிஷ் போஸ்.

மிட் ஃபீல்டர்கள்: உதந்தா சிங், பிராண்டன் பெர்னாண்டஸ், லிஸ்டன் கோலாகோ, ரோலின் போர்ஜஸ், கிளான் மார்டின்ஸ், அனிருத் தாபா, ப்ரோனாய் ஹால்டர், சுரேஷ் சிங், லாலெங்மாவியா அப்புயா, அப்துல் சஹால், யாசிர் முகமது, லாலியன்ஸுவாலா சாங்குயேன், பிபின் சிங்கியன்.

ஃபார்வேர்ட் : இஷான் பண்டிதா, சுனில் சேத்ரி, மன்வீர் சிங்.