விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரை திட்டமிட்டப்படி இந்தியா நடத்தும்: பிசிசிஐ நம்பிக்கை

டி20 உலகக்கோப்பை தொடரை திட்டமிட்டப்படி இந்தியா நடத்தும்: பிசிசிஐ நம்பிக்கை

JustinDurai

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை திட்டமிட்டபடி இந்தியா நடத்தும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து இப்போதே கேள்வி எழுப்புவது சரியல்ல என்றும், போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

9 நகரங்கள் என்பதற்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து நகரங்களாக குறைத்து, அங்கே போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவில் நடத்தப்படாத சூழல் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். எங்கு நடந்தாலும், இந்தியாதான் அந்த தொடரை நடத்தும் என்றும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.