விளையாட்டு

வீரர்களுக்கு ஷூக்களை பரிசாக வழங்கிய சச்சின்

வீரர்களுக்கு ஷூக்களை பரிசாக வழங்கிய சச்சின்

webteam

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு ஷூக்களை பரிசாக வழங்கினார்.

மும்பையில் ஐடிபிஐ வங்கி சார்பில் நடைபெற்ற இரண்டாவது மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தனராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். இந்த மாரத்தானில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய சச்சின், 

"நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஷார்ஜாவில் ஏற்பட்ட ஒரு கடினமாக சூழ்நிலையை நினைவு கூற விரும்புகிறேன். 1998-ல் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன், குறிப்பிட்ட ஓவருக்குள் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்."

என ஷார்ஜா தொடரில் தன்னுடயை 48 மணி நேர அனுபவத்தை ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஷார்ஜா நிகழ்வை பகிர்ந்து கொண்டார். 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாதான் அதிக இளைஞர்கள் உள்ள நாடாக இருக்கும். எனவே, இந்திய இளைஞர்கள் அனைவரும் வலிமையாக இருக்க தினமும் உடல்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் 100 ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு ஷூக்களையும் பரிசாக வழங்கினார்.