தன் கழுத்தில் வலி இல்லை என பெண் ஜாண்டிரோட்ஸ் என புகழப்பட்ட நட்டகன் தெரிவித்துள்ளார்
மகளிருக்கான ஐபிஎல்லான டி20சேலஞ்ச் தொடரில் சூப்பர் நோவாஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியனாக மகுடம் சூடியது.ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனை நட்டகன் சந்தம் பாய்ந்து பிடித்த ஒரு பீல்டிங் சமூக வலைதளங்களில் வைரலானது.
பவுண்டரியை நோக்கிச் சென்ற பந்தை பறந்து விழுந்து தடுத்தார் நட்டகன் சந்தம். அவரின் பீல்டிங்கை பார்த்து எதிரணியினரும் கைதட்டி பாராட்டினர். இவர் ஒரு பெண் ஜாண்டிரோட்ஸ் என சமூக வலைதளங்களில் பரலரும் நட்டகனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அதேவேளையில் மிகவும் அபாயகரமான ஃபீல்டிங்காகவும் அது இருந்தது. கொஞ்சம் தவறி இருந்தால் மிகப்பெரிய விபத்தாகக் கூட அந்த ஃபீல்டிங் இருந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
சிலர் உங்கள் உடல்நலனிலும் அக்கறைக் கொள்ளுங்கள். உங்கள் கழுத்துப்பகுதி தற்போது எப்படி இருக்கிறது என்றும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. எந்த வலியும் இல்லை. என் கழுத்து குறித்து அனைவரின் விசாரிப்புகளுக்கும் நன்றி என நட்டகன் தெரிவித்துள்ளார்.