Jannik Sinner, carlos alcaraz pt web
டென்னிஸ்

FRENCH OPEN | இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர் vs கார்லோஸ் அல்காரஸ்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

அங்கேஷ்வர்

பாரிசில் நடக்கும் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்திற்காக மோதுகின்றனர். ஜானிக் சின்னர் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் என்பதோடு மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். மறுபுறம் கார்லோஸ் அல்காரஸ் தொடரின் நடப்பு சாம்பிடன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் முழுவதும் அல்காரஸ் மற்றும் சின்னர் என இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Jannik Sinner

அரையிறுதிப்போட்டியில் காலில் காயம் காரணமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டிய லோரென்சோ முசெட்டியை அல்கராஸ் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் சின்னரோ ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைகிறார்.

இருவரும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியதில்,10 போட்டிகளில் அல்காரசும், 6இல் சின்னரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் மோதிய கடைசி நான்கு போட்டிகளில் நான்கிலும் அல்கராஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி களிமண் தரைகளில் சின்னரை அல்காரஸ் இரண்டுமுறை வீழ்த்தியுள்ளார். ஆனால், இருவரும் க்ராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் நேரடியாக விளையாடியதில்லை. மிகவும் சுவாரஸ்யமாக இருவரும் தனித்தனியாக இதுவரை விளையாடிய இறுதிப்போட்டிகளில் அனைத்திலும் வென்றுள்ளனர். முதன்முறையாக இருவரில் யாராவது ஒருவர் வெற்றி பெறும் சூழல் ஏற்பட இருக்கிறது.

carlos alcaraz

ரோலாண்ட் கார்ரோஸ் என அழைப்படும் பிரெஞ்சு ஓபன் தொடரில் தரவரிசை பட்டியலில் முதல், இரண்டு இடங்களில் இருக்கும் வீரர்கள், 1984ஆம் ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை.