விளையாட்டு

விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு! காரணம் என்ன?

EllusamyKarthik

விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு! காரணம் என்ன?

டென்னிஸ் உலகின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர். 39 வயதான அவர் விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மையில் கத்தார் ஓப்பன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்றிருந்தார். அவரிடம் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லியிருந்தார். அதோடு விம்பிள்டன் தொடரிலும் விளையாடுவேன் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒற்றையர் ஆடவர் பிரிவில் பெடரர் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை தங்கம் வென்றத்தில்லை. அந்த பதக்க கனவை நிறைவேற்றவே இந்த முடிவாம். 

கடந்த 2020 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு காயத்தினால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதனால் அமெரிக்க ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலியா ஓப்பன் (2021) தொடர்களை மிஸ் செய்தார். 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட அவர் கத்தார் ஓப்பன் தொடரில் விளையாடியது உலக செய்தியானது. “நான் முழு உடற் தகுதியுடன் விம்பிள்டன் விளையாட விரும்புகிறேன்” என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.