நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், தனது வீட்டில் டென்னிஸ் விளையாடிய வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அனைவரும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் வீட்டு வேலைகள் செய்வது, செல்லப் பிராணிகளை வளர்ப்பது உள்ளிட்ட புது முயற்சிகளில் இறங்கி அதனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், தனது வீட்டில் டென்னிஸ் விளையாடிய வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஸ்பெயின் நாட்டில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த நடால், தனது மனைவியுடன் இணைந்து டென்னிஸ் விளையாடியுள்ளார். இருக்கைகளை வலையாக வைத்து கொண்டு இருவரும் டென்னிஸ் விளையாடியது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.