வில்வித்தை பயிற்சியின்பொழுது இளம் வீராங்கனையின் கழுத்தில் அம்பு பாய்ந்தது.
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் வில்வித்தை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பசில்லா காட்டுன் என்ற இளம் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று 3 வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டனர். அவர்களில் ஜுவல் ஷேக் என்ற வீரர், இலக்கை குறி வைத்து அம்பை எய்தார். அப்போது எதிர்பாரதவிதமாக பசில்லா திடீரென அதன்முன் வந்தார். இதில் அம்பு அவர் வலது காதுக்குக் கீழே கழுத்தில் பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.