2025 மகளிர் உலகக் கோப்பை இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா 298 ரன்கள் எடுத்த இந்திய அணியை தடுக்க முடியாமல் 45.3 ஓவர்களில் 10 விக்கெட்களுடன் தோல்வியடைந்தது. தீப்தி சர்மாவின் அசத்தலான பந்துவீச்சு மற்றும் அமஞ்சோத்தின் கேட்ச் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மகளிர் அணி அபார வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் விளாசியது. பிறகு தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 45.3-வது ஓவர்களிலேயே 10 விக்கெட்களையும் இழந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
இந்த போட்டியில், இந்திய மகளிர் அணி வீரர் அமஞ்சோத்தின் கேட்ச் மேட்ச்சை மாற்றியது. 100 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் லாராவின் கேட்ச்சை தடுமாறி அமஞ்சோத் பிடித்ததும் மொத்த மைதானம் மற்றும் இல்லாமால் மொத்த இந்தியாவும் கொண்டாடியது.
இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தன்னுடைய அசாத்தியமான பந்துவீச்சால் இந்த போட்டியில் மட்டும் 5 விக்கெட்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகளை நிலைகுழையவைத்தார். அதே போல் இந்த 2025 மகளிர் ஒரு நாள் உலககோப்பையில் மொத்தம் 20 விக்கெட்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதல் முறையாக இந்திய மகளிர் அணி உலக கோப்பையை கையில் ஏந்தியுள்ளதை இந்திய மகளிர் அணி குழு உற்சாகமாக கொண்டாடிவருகிறது. இந்திய மகளிர் அணியின் உலக கோப்பை வெற்றிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.