விளையாட்டு

ஷாகிப் அரை சதம்: கம்மின்ஸ் வேகத்தில் திணறும் பங்களாதேஷ்

ஷாகிப் அரை சதம்: கம்மின்ஸ் வேகத்தில் திணறும் பங்களாதேஷ்

webteam

பங்களாதேஷ் சென்றுள்ள ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் சந்திப்பது, 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை என்பதால் பங்களாதேஷில் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி தமிம் இக்பாலும் சவுமியா சர்காரும் களமிறங்கினார். கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சால், பங்களாதேஷ் ரன் எடுக்கத் திணறியது. சவுமியா சர்கார் 8 ரன்னில் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்த வந்த இம்ருல் கெய்ஸ், சபீர் ரகுமான் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார் கம்மின்ஸ். அவரது ஆக்ரோஷத்தில் அடங்கிய பங்களாதேஷ் அணி, உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார். தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து இருவரும் ஆடி வருகின்றனர்.