விளையாட்டு

“கிரிக்கெட் உலக ஜாம்பவான்களை திக்குமுக்காடச் செய்தவர்”-சேலம் நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து

“கிரிக்கெட் உலக ஜாம்பவான்களை திக்குமுக்காடச் செய்தவர்”-சேலம் நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து

Veeramani

சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன்  இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்