Mr. Universe pt desk
விளையாட்டு

Mr.Universe பட்டத்தை வென்ற தமிழக வீரர்!

தென்கொரியாவில் நடைபெற்ற 14 வது மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் பட்டம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

webteam

இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். 50 முதல்

60 வயது வரையிலான பிரிவில், மாஸ்டர் அருணாச்சலம் என்பவர் தங்கப் பதக்கத்தையும், 80 கிலோ எடைப்பிரிவில் மரிய ஜிஜோ வெள்ளிப்பதக்கத்தையும், 85 கிலோ எடைப்பிரிவில் மோகன் என்பவர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். 90 கிலோ எடைப்பிரிவில் சரவணன் தங்கப் பதக்கத்தையும், 100 கிலோ எடைப்பிரிவில் கார்த்திகேயன் என்பவர் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மாஸ்டர் ஜெயராமன் நான்காம் இடத்தையும்,

Athletic Physique பிரிவில் வசந்த் என்பவர் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.