விளையாட்டு

சையத் முஷ்டக் அலி கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி!

EllusamyKarthik

சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழக அணி.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 120 ரன்களை குவித்தது அந்த அணி. அந்த அணிக்காக விஷ்ணு சொலங்கி 49 ரன்களை எடுத்திருந்தார். 

120 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டியது தமிழக அணி. 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது தமிழ்நாடு. ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் 7 பந்துகளில் 18 ரன்களை குவித்து தமிழகத்தை சாம்பியனாக்கினார் ஷாருக்கான். பவுலிங்கில் தமிழக அணிக்காக மணிமாறன் சித்தார்த் மாஸ் காட்டினார். ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார் மணிமாறன் சித்தார்த்.

கடந்த சீசனில் தமிழக அணி இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. அதற்கான மருந்தாக இந்த வெற்றி தமிழக அணிக்கு அமைந்துள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது தமிழ்நாடு. 7 இன்னிங்ஸில் 350 ரன்களை குவித்துள்ளார் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர் நாராயண் ஜெகதீசன்.