விளையாட்டு

ஊக்க மருந்து உட்கொண்டால் கிரிமினல் குற்றம்: தடகள சம்மேளனத் தலைவர் எச்சரிக்கை

webteam

விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டால் கிரிமினல் குற்றச்சாட்டு பதியப்படும் என்று சர்வதேச தடகள சம்மேளனத் தலைவர் செபாஸ்டியன் கோ எச்சரிக்கை செய்துள்ளார்.

விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாட்டு விளையாட்டு சங்கங்களும் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய செபாஸ்டியன் கோ, எத்தியோப்பியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய சில நாடுகள் ஊக்க மருந்து பயன்படுத்தப்படுவதை கிரிமினல் குற்றம் என சட்டம் இயற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.