விளையாட்டு

காட்சிப்போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீசாந்த்: இந்திய அணிக்காக களமிறங்குவேன் என நம்பிக்கை

காட்சிப்போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீசாந்த்: இந்திய அணிக்காக களமிறங்குவேன் என நம்பிக்கை

webteam

வாழ்நாள் தடை நீக்கப்படாத கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்றார்.

சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட காட்சிப்போட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்றார்.

பின்னர் பேட்டியளித்த அவர், விரைவில் இந்திய அணிக்காக விளையாடும் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், அதனை செயல்படுத்த பிசிசிஐ தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.