RCB
RCB pt desk
T20

“நாங்கள் வெற்றிக்கு திரும்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது..” - RCB வீரர் நம்பிக்கை!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல், காம்ரான் க்ரீன், ஃபேஃப் டூபிளெசிஸ், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ் என அனைவரும் தரமான ஃபார்முடன் இருந்தனர். அதனால் நடப்பு 2024 ஐபிஎல் தொடரை வெல்லப்போகும் ஒரு அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கிய ஆரம்பத்தில் தங்களுடைய ஃபார்மை எடுத்துவர முடியாமல் அனைத்து வீரர்களும் தடுமாற, அதிலிருந்து மீண்டுவருவதற்குள் 6 போட்டிகளில் வரிசையாக தோற்று பரிதாபமான நிலைக்கே ஆர்சிபி அணி சென்றுள்ளது. தற்போது அவர்களின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், பந்துவீச்சாளர்கள் ஓரளவு டீசண்டான பவுலிங்கிற்கு தயாராகியுள்ளனர். இருப்பினும் அவர்களால் வெற்றியின் பாதைக்கு திரும்பவே முடியவில்லை.

RCB

இந்நிலையில் பலம்வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்று மோதுவது குறித்து பேசியிருக்கும் ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ், அவர்கள் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்தார். ஆர்சிபி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 287 ரன்களை குவித்திருந்தாலும், அவர்களை சொந்த மண்ணில் வைத்து ஆர்சிபி அணியால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“நாங்கள் வெற்றிக்கு திரும்பிவிட்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாது..”

ஆர்சிபி அணியின் தொடர் தோல்வி குறித்து பேசியிருக்கும் வில் ஜாக்ஸ், “புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த நாங்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்துவருகிறோம். அது நிச்சயம் பலன் தரும் என்று நம்புகிறோம். நாங்கள் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும், அங்கிருந்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது” என்று பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து வில் ஜாக்ஸ் நம்பிக்கையுடன் பேசினார்.

RCB

அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெல்வது பற்றி கூறிய ஜாக்ஸ், “சன்ரைசர்ஸ் அணி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் 260 ரன்களுக்கு மேல் மூன்றுமுறை அடித்துள்ளனர். அவர்களின் எல்லா பேட்டர்களும் ஃபார்மில் இருக்கிறார்கள், தற்போது சொந்த மண்ணில் விளையாடவிருக்கிறார்கள். வலுவான அணியாக தெரியும் அவர்களை எதிர்த்து இங்கு வருவது சவாலானது. ஆனால் அவர்களை பார் ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தினால் எங்களால் வெற்றிபெற முடியும்” என்று போட்டிக்கு முன்னதாக பேசினார்.

Travis Head

மேலும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய அவர், “டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் முதல் பந்திலிருந்தே பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்குகிறார்கள். அவர்கள் என்ன திட்டங்களை வைத்திருந்தாலும், அவற்றை பந்து வீச்சாளர்களிடம் விட்டு விடுகிறோம். அவர்களை விரைவாகவே வெளியேற்றி, மூன்றாவது பேட்டரை சீக்கிரம் கொண்டுவந்தால் குறைந்த ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறினார்.