Virat Kohli
Virat Kohli Twitter
T20

'விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக இருப்பாரா?' - வெளியான அப்டேட்..!

Justindurai S

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் காயம் காரணமாக இந்த போட்டியிலும் இம்பேக்ட் பிளேயராகவே ஆடினார். இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலியே களமிறங்கினார்.

Faf du Plessis | Glenn Maxwel

நடப்பு ஐபிஎல்-ல் ‘கேப்டன்‘ விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் தோல்வியை கண்டது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணி டாஸ் வென்ற நிலையில், விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். அப்போது அவர், அடுத்தப் போட்டியில் டூ பிளஸிஸ் வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ''இதற்கு முன்பான ஆட்டங்களிலெல்லாம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ரன்களை நல்ல முறையில் சேஸ் செய்துள்ளோம். எனவே பந்துவீச்சை தேர்ந்தெடுக்கிறேன். ஆர்சிபி அணிக்கு மீண்டும் கேப்டனாக செயல்படுவது ஜாலியாக உள்ளது. ஏனென்றால் ஒரு அணியாக சிறப்பாக விளையாடுகிறோம். கேப்டன்சியைப் பொறுத்தவரை, சில நேரங்களில் என் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு முடிவு செய்வேன். அடுத்தப் போட்டியில் டூ பிளஸிஸ் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார். இதன்மூலம் பெங்களூர் அணி மோதவிருக்கும் அடுத்தப் போட்டியில் டூ பிளஸிஸ் மீண்டும் கேப்டனாக இணைவார் என்பது உறுதியாகியுள்ளது.