manoj bhandage rcb x
T20

ஐபிஎல் ஏலத்தில் RCB தூக்கிய வீரர் மிரட்டல் பந்துவீச்சு.. 90 ரன்னுக்கு சுருண்ட தமிழ்நாடு!

முஷ்டாக் அலி டிரோபி போட்டியில் கர்நாடாகாவிற்கு எதிராக தமிழ்நாடு அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Rishan Vengai

2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கர்நாடகா பவுலர்கள் தமிழ்நாடு அணியை 90 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கினர்.

கடந்த பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 221 ரன்களை குவித்த தமிழ்நாடு இன்றைய போட்டியில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்சிபி ஆல்ரவுண்டர்..

இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கர்நாடக அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டை போல விக்கெட்டை சரிய விட்ட தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

தமிழ்நாடு அணி

கர்நாடக அணியில் சிறப்பாக பந்துவீசிய வி கௌசிக் மற்றும் மனோஜ் பந்தகே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய மனோஜ் பந்தகே ஆர்சிபி அணியால் 2025 ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வீரராவார். பெங்களூர் அணியில் இடம்பெற்ற இரண்டு கர்நாடகா வீரர்களும் இவரும் ஒருவர் ஆவார்.

virat kohli - manoj bhandage

தமிழ்நாடை தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி 11.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்திருக்கும் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது. 5 போட்டியில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.