T20 Mumbai League Final x
T20

மும்பை டி20 லீக்| அடுத்தடுத்த 2 ஃபைனல்களில் தோல்வி.. 2 கோப்பைகளை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

2025 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை கண்டது. இந்த சூழலில் டி20 மும்பை லீக்கிலும் சோபா மும்பை அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இறுதிப்போட்டியில் இன்னுமொரு தோல்வியை சந்தித்துள்ளார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை டி20 லீக்கில் பங்கேற்று சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கேப்டனாக அழைத்துச்சென்றார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெரும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணி, சித்தேஷ் லாட் தலைமையிலான மும்பை தெற்கு மத்திய அணியை எதிர்த்து விளையாடியது.

கோப்பையை தட்டிச்சென்றது மும்பை தெற்கு மத்திய அணி!

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சோபோ அணி, மயுரேஷின் அசத்தலான அரைசதம் மற்றும் 18 வயது வீரரான ஹர்ஷின் 4 சிக்சர்கள் என்ற அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 157 ரன்கள் சேர்த்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை தெற்கு மத்திய அணி முதல் 4 ஓவருக்கே 40 ரன்களை விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு கம்பேக் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரின் சோபோ அணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது.

எல்லாம் சரியாக சென்றுகொண்டிருக்க 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சின்மய் மற்றும் அவாய்ஸ் கான் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் அடித்த சின்மய் மும்பை தெற்கு மத்திய அணியை கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.

2025 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் கோப்பையை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர், 2025 டி20 மும்பை லீக்கின் இறுதிப்போட்டியிலும் கோப்பையை இழந்துள்ளார்.