அசாருதீன் எக்ஸ் தளம்
T20

ஹைதராபாத் உப்பல் மைதானம் | அசாருதீன் ஸ்டாண்டு பெயர் நீக்கம்!

ஹைதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு 'முகமது அசாருதீன் ஸ்டாண்ட்' என சூட்டப்பட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Prakash J

கிரிக்கெட் மைதானங்களில் உள்ள ஸ்டாண்டுகளில், ஓய்வு பெற்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. அந்தவகையில், 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அசாருதீன் தலைமையிலான நிர்வாகக் குழு, ஹைதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு 'முகமது அசாருதீன் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது. இது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, அதிகார துஷ்பிரயேகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும், இதுதவிர, அசாருதீனின் பெயருடன் இனி டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என்றும் HCAவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் நெறிமுறை மற்றும் குறைகேட்பு அதிகாரி நீதிபதி வி.ஈஸ்வரய்யா பிறப்பித்துள்ளார்.

அசாருதீன்

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அசாருதீன், “இதில் எந்த நலன் முரண்பாடும் இல்லை. இதைப் பார்த்து, கிரிக்கெட் உலகம் சிரிக்கும். 17 வருட கிரிக்கெட் வீரராக, கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓர் அணியின் கேப்டனாக, ஹைதராபாத் கிரிக்கெட் வீரராக இருந்தவரை நீங்கள் இப்படித்தான் நடத்துகிறீர்கள். இது மிகவும் வேதனையான நிலை. நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வோம், 100%. சட்டம் அதன் போக்கில் செல்லும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.