Dhoni and Rohit Sharma
Dhoni and Rohit Sharma File image
T20

‘என்னது... இன்றைய CSK vs MI போட்டி ரத்தாகுமா?’ ரசிகர்களை பீதியடைய வைக்கும் சென்னை வானிலை!

Jagadeesh Rg

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆம் சென்னையின் இன்றைய வானிலை அறிவிப்பின்படி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்துடன் வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை இன்றையப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு கடினமாகிவிடும் என்பது ரசிகர்களின் கூடுதல் சோகத்துக்கு காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே லக்னோ அணியுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

chennai super kings team

எல் - கிளாசிகோ போட்டி - ஒரு பார்வை

ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்றழைக்கப்படுகிறது மும்பை - சென்னை அணிகள் இடையிலான போட்டி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினால் எந்தளவு பரபரப்பு இருக்குமோ, அதே பரபரப்பு மும்பை - சென்னை அணிகள் மோதும்போது களத்திலும் சமூக வலைதளங்களிலும் இருக்கும். அதற்கு காரணம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகள் வென்ற அணிகளாக மும்பையும், சென்னையும் உள்ளன என்பது.

இவ்விரு அணிகளும் ஐபிஎல்லில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்படி 20 போட்டிகளில் மும்பையும் , 15 போட்டிகளிலும் சென்னையும் வெற்றி கண்டுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் சென்னை, மும்பை அணிகள் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் திடலில் பிற ஐபிஎல் அணிகள் ஆதிக்கம் செலுத்துவது சற்று கடினம். ஆனால் மும்பை அணி அப்படியல்ல.

Mumbai Indians

சேப்பாக்கம் திடலில் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளில் மும்பையும், 2 போட்டிகளில் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த சென்னை அணி, இந்த சீசனில் சற்று தடுமாறி வருகிறது. ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் சேப்பாக்கம் திடலில் சென்னையை வீழ்த்தியுள்ளன என்பது அதற்கு சமீபத்திய உதாரணங்கள்!

மேலும் சென்னை அணி கடந்த 3 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. மறுபுறம் மும்பை அணி கடந்த 2 போட்டிகளில் 200க்கும் அதிகமான ரன்கள் இலக்கை துரத்தி பிடித்துள்ளது. இன்னொருபக்கம் இரு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்த தோனியின் படை என்னென்ன வியூகங்களை வகுத்துள்ளது என்பதை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.