ராகுல் திரிபாதி web
T20

0% இண்டன்ட்! நெருப்பு பற்றாத திரியாக நமத்துப் போய் இருக்கும் திரிபாதி! காத்திருக்கும் இளம் வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் நெருப்பு பற்றாத திரியாக, நமத்துப் போய் இருக்கிறது சி.எஸ்.கே வீரர் ராகுல் திரிபாதியின் ஆட்டம். அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழத்தொடங்கியிருக்கின்றன.

PT WEB

மைதானத்தில் பேட்டிங்கை தொடங்கும் முன் ராகுல் திரிபாதி மேற்கொள்ளும் வார்ம் ஆப் இப்போது இணையதள கிரிக்கெட் ரசிகர்களிடம்  விமர்சனப்  பொருளாகியி ருக்கிறது. நடனம் ஆடுகிறார், ஆடுகளத்தில் தூர் வாருகிறார் என்றெல்லாம் ரசிகர்களின் கேலி செய்து வருகின்றனர்.

0% இண்டண்ட்.. கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் முந்தைய சீசன் ஏலத்தில் அடிப்படை விலையாக 75 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட ராகுல் திரிபாதியை மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சி.எஸ்.கே அணி. ஆனால் நடப்புத் தொடரில் அவரது ஆட்டத்திறனை கண்டு ரசிகர்கள் ஏக அதிருப்தியில் இருக்கின்றனர். 

அடுத்தடுத்து 5 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, ஒருவழியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி கண்டிருக்கிறது. என்றாலும் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை அணி.

rahul tripathi

பந்துவீச்சில் சென்னை அணியின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக
இருந்தாலும், பேட்டிங்கில் தொடர்ந்து ஜொலிக்கத் தவறி வருகிறது. அதிலும் ராகுல் திரிபாதியின் பங்களிப்பு மோசமாக இருந்து வருகிறது.

மற்ற அணிகளில் முக்கிய வீரர்கள் சிக்சர்களாக விளாசித்தள்ளிக் கொண்டிருக்க  5 போட்டிகளில் விளையாடி 55 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக 23 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

rahul tripathi

இந்நிலையில் சென்னை அணியில்திரிபாதிக்கு பதிலாக உள்ள வன்ஷ் பேடி, அக்ஷய் மஹத்ரே, ஆண்ட்ரே சித்தார்த் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சி.எஸ்.கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.