2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. 4 போட்டிகள் நடந்துள்ள நிலையில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், சிஎஸ்கே மற்றும் டேல்லி கேபிடல்ஸ் அணிகள் வெற்றியை ருசித்துள்ளன.
இந்நிலையில் 5வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகின்றன.
அகமாதாபாத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 24 வயது இளம்வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து 97 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து அஸ்மதுல்லா 16, ஸ்டொய்னிஸ் 20 அடிக்க, கடைசிநேரத்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஷஷாங் சிங் 16 பந்தில் 44 ரன்கள் எடுத்து அசத்த 20 ஓவரில் 243 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.