pbks vs mi web
T20

’பயம் காட்டும் மூத்த அணி vs பயப்படவே தெரியாத இளம் அணி’ - MI vs PBKS மோதலில் பஞ்சாப் பந்துவீச்சு!

2025 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 மோதல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

18வது ஐபிஎல் சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் 2 ஆட்டங்களின் முடிவில் தெரிந்துவிடும். முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு அணி எது என்ற மோதலில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.

5 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணிக்கும், நடப்பு ஐபிஎல் தொடரில் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்த பஞ்சாப் அணிக்கும் இடையேயான மோதல் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

போட்டியில் சிறந்த மோதல்கள்..

* மும்பை 0 டிராபி - எப்போதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் முடிக்கவில்லையோ அப்போதெல்லாம் கோப்பையே வென்றதில்லை என்ற சாதனையை கொண்டுள்ளது. அதனை இந்த சீசனில் முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

*சூர்யகுமார் vs சாஹல் - மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக இருந்துவரும் சூர்யகுமார் யாதவ் நடப்பு சீசனில் மட்டும் 640 ரன்களை குவித்து ஒரு ஐபிஎல் சீசனில் மும்பைக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக விளங்கிவருகிறார். அவரை சுற்றியே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை பெற்றுவருகிறது. அவரை வீழ்த்த வேண்டுமானால் அவருக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக் வைத்திருக்கும் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்கவேண்டும் என, நடக்கவிருக்கும் போட்டியில் களமிறக்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

bumrah

*ரோகித் சர்மா vs அர்ஷ்தீப் சிங் - இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாலே அலர்ஜி எனும்வகையில் தான் ரோகித் சர்மாவின் பேட்டிங் இருக்கும். நடப்பு சீசனில் மோசமான தொடக்கம் கிடைத்ததிற்கு பிறகு ரன்களை அடித்துவரும் ரோகித் சர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பலமுறை ஆட்டமிழந்துள்ளார்.

*பும்ரா ஒன் மேன் ஆர்மி - மும்பை இந்தியன்ஸின் இரண்டு பெரும் காப்பான்களாக சூர்யா மற்றும் பும்ரா இருந்துவருகின்றனர். சூர்யாவை விரைவாக வெளியேற்றவேண்டும், பும்ராவிற்கு எதிராக எப்படி விளையாடவேண்டும் என்ற திட்டத்துடன் பஞ்சாப் செயல்பட்டால்தான் வெற்றியை பெறமுடியும். இல்லையென்றால் தனியாளாக போட்டியை கொண்டுசென்றுவிடுவார் பும்ரா.

பேர்ஸ்டோ

*இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் பேர்ஸ்டோ - இங்கிலாந்து அணியின் 3 வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பேர்ஸ்டோ, தற்போது பங்கேற்கும் லீக் போட்டிகளில் எல்லாம் துவம்சம் செய்துவருகிறார். இழக்க இனி ஒன்றுமில்லை என்ற மனநிலையில் அடித்து நொறுக்கிவரும் பேர்ஸ்டோ, பஞ்சாப் அணிக்கு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கப்போகிறார்.