2011 csk final
2011 csk final CSK Twitter
T20

இதே நாளில் 12 ஆண்டுகளுக்கு முன்பு....2011 இறுதிப் போட்டியில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே

Jagadeesh Rg

நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாதில் நடைபெற இருக்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்தாண்டு ஐபிஎல் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது.

சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது மே 28 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரை தோற்கடித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சிஎஸ்கே அணி முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு மும்பையை வென்று கோப்பையை கைப்பற்றியது. இப்போது 2011 ஐபிஎல் இறுதிப் போட்டி ஒரு சின்ன பிளாஷ்பேக்காக பார்க்கலாம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஜோடியான மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் 159 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்து சாதனை படைத்தது. ஹஸ்ஸி 45 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 52 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள் உடன் 95 ரன்கள் எடுத்தார். பின்பு இறங்கிய தோனி 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே 206 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த், கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்பு களமிறங்கிய ஆர்சிபி முக்கிய விக்கெட்டுகளை ஆகியோரை அசால்ட்டாக்க அவுட்டாக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் மூன்று ஓவர்களிலேயே இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்தது ஆர்சிபி. கோலி ஆட்டமிழந்த பிறகு, சவுரப் திவாரியைத் தவிர வேறு எந்த வீரரும் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியவில்லை. திவாரி 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், சென்னை தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் ஜகாதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

2011 CSK team

ஆர்சிபி 20 ஓவரில் டார்கெட்டை எட்ட முடியாமல், 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தொடர்ச்சியான இரண்டாவது ஐபிஎல் பட்டத்தை தனது சொந்த மண்ணில் வென்றது.