Nitish Rana
Nitish Rana  twitter
T20

”ஸ்லோ ஓவர் ரேட்”.. நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதிப்பு! இந்த பிரச்னைக்கு ஒரு என்டு கார்டே இல்லையா?

Jagadeesh Rg

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்துக்கு பந்துவீசாத காரணத்துக்காக கொல்கத்தா கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணி நேற்று மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களும், ஷாருக் கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களும் எடுத்தனர்.

Nitish Rana | KKR

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது. நிதிஷ் ராணா 51 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவர்களில் ரஸசலும், ரிங்கு சிங்கும் அற்புதமாக விளையாடினார்கள்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் கடைசி பந்தில் ரிங்கு சிங் அபாரமான பவுண்டரி அடித்து வெற்றியை வசமாக்கினார்.

Southee | Nitish Rana | Mandeep | KKR

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்துக்கு பந்துவீசாத காரணத்துக்காக இந்த அபராதமாக விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனெவே டூ ப்ளெசிஸ், விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், டேவிட் வார்னர் ஆகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.