மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் ipl
T20

இறுதிப்போட்டியில் யாருக்கு இடம்? பஞ்சாப்-க்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!

2025 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 204 ரன்களை நிர்ணயித்துள்ளது மும்பை அணி.

Rishan Vengai

18வது ஐபிஎல் சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் 2 ஆட்டங்களின் முடிவில் தெரிந்துவிடும். முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு அணி எது என்ற மோதலில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 203 ரன்கள் அடித்து அசத்தியுள்ளது.

210 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்..

மழை காரணமாக 7.30 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம் 9.45 மணிக்கு தொடங்கியது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 8 ரன்கள் மட்டுமே அடித்து விரைவாகவே வெளியேறினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 38 ரன்கள் அடித்து ரன்வேகத்தை குறையாமல் பார்த்துகொண்டார்.

அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு அசத்தினர்.

கடைசியாக களமிறத்திற்கு வந்த நமன் திர் அடுத்தடுத்து 7 பவுண்டரிகளை விரட்ட 20 ஓவரில் 203 ரன்கள் என்ற நல்ல டோட்டலை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதுவரை முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்து தோற்றதே இல்லையென்ற ரெக்கார்டை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் என்ற இலக்கை எட்டுமா பஞ்சாப் கிங்ஸ் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.