dhoni
dhoni PTI
T20

கோலி முதல் ஏ.பி.டி.வில்லியர்ஸ் வரை... இந்த சாதனையில் தோனிக்கு முன் உள்ள ஆறு பேர் இவங்கதான்!

Prakash J

அதிரடிக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16வது சீசன், கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது முதலே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் ஐபிஎல்-ல் எண்ணற்ற சாதனைகள் புதிதாகப் படைக்கப்பட்டும், ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகள் முறியடிக்கப்பட்டும் வருகின்றன. அப்படியொரு சாதனைதான் இன்றும் நடந்திருக்கிறது! அதுவும் நம்ம சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

dhoni

இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது. எப்போதும் கடைசி கட்டத்தில் இறங்கி சிக்ஸர் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தும் தோனி, இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸ்ர்களைப் பறக்கவிட்டார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் கடந்த 7வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அவர்.

இந்தப் பட்டியலில் ’ரன் மெஷின்’ என அழைக்கப்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர், இதுவரை 224 போட்டிகளில் விளையாடி 6706 ரன்கள் எடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகார் தவான் 6284 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவர், இந்த ரன்களை 207 போட்டிகளில் எடுத்துள்ளார்.

3வது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய வீரருமான டேவிட் வார்னர் உள்ளார். அவர், 163 போட்டிகளில் 5937 ரன்கள் எடுத்துள்ளார்.

dhoni

4வது இடத்தில் மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர், 228 போட்டிகளில் 5880 ரன்கள் எடுத்துள்ளார்.

6 மற்றும் 7வது இடங்களை ஐபிஎல் தொடரில் விளையாடாத சுரேஷ் ரெய்னாவும் தென்னாப்பிரிக்க வீரருமான ஏ.பி.டி.வில்லியர்ஸும் பிடித்துள்ளனர்.

சென்னை அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 205 போட்டிகளில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். பெங்களூரு அணியில் விளையாடிய ஏ.பி.டி.வில்லியர்ஸ் 184 போட்டிகளில் 5162 ரன்கள் எடுத்துள்ளார். இந்த இருவரைத் தவிர மற்ற எல்லா வீரர்களும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகின்றனர். இதனால், அவர்கள் மேலும் ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது வரை, தோனி மட்டும் இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஐபிஎல்லில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் தோனி 7வது இடத்தில் இருந்தாலும், அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் தோனியே முதலிடத்தில் உள்ளார். அவர், இதுவரை 236 போட்டிகளில் விளையாடி உள்ளார்.