Sreesanth
Sreesanth PT Desk
T20

“DC-க்கு எதிரானப் போட்டியில் கோலி இதை செய்து கங்குலிக்கு சமர்ப்பித்தால் சிறப்பு”- ஸ்ரீசாந்த்

Jagadeesh Rg

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

‘டெல்லிக்கு எதிராக நடைபெறவிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி சதமடிக்க வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு எதிரான பெங்களூருவின் கடைசி 2 லீக் போட்டிகளில், முதல் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அந்தப் போட்டியில் அரை சதமடித்த கோலி, மிகவும் ஆக்ரோஷமாக அதனை கொண்டாடினார். அந்தப் போட்டியில் டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி மற்றும் பெங்களூரு அணியின் கோலி இடையே இருந்த பனிப்போர் மிகவும் வெளிப்படையாக தெரிந்தது. போட்டி முடிந்து செல்லும்போது கங்குலிக்கு கோலி கைகுலுக்கவில்லை. மேலும் இந்தப் போட்டிக்கு பின்பு கோலி, கங்குலி இருவரும் பரஸ்பரமாக இன்ஸ்டாவில் இருந்து ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இதற்கு பின் அடுத்தப் போட்டியில் வார்த்தைப் போரிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

Virat Kohli

இந்நிலையில், இவையெல்லாம் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பேசியுள்ளார். அதில் அவர் “டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி பொன்னானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்தப் போட்டி கோலிக்கும், வார்னருக்கும் சவாலானதாக இருக்கும்.

இருவரில் யார் சிறந்தவர்கள் என நிரூபிக்க கடுமையாக போராடுவார்கள். டெல்லி தொடர்ந்து சில வெற்றிகளுக்காக போராடி வருகிறார்கள். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே, பெங்களூரு பேடஸ்மேன்களை திணற வைப்பார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Virat Kohli

மேலும் பேசிய ஸ்ரீசாந்த் “விராட் கோலி இந்தப் போட்டியில் சதமடிப்பதை காண ஆர்வமாக இருக்கிறேன். அதனை அவர் கங்குலிக்கு சமர்ப்பித்தால் இன்னும் சிறப்பு. கோலி மிகச் சரியான பங்களிப்பை கொடுத்து, நிச்சயம் பெங்களூரை வெற்றிப்பெற வைப்பார்” என்றுள்ளார்.