K L Rahul
K L Rahul PT Desk
T20

”IPL தொடரோடு WTC இறுதி போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போய்விட்டது”- கே.எல்.ராகுல் வெளியிட்ட அறிக்கை

Jagadeesh Rg

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதித்போட்டியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் காயமடைந்தார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தொடைப் பகுதியில் தசைநாறு கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல் ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Lucknow Super Giants players

மேலும் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிபோட்டியில் இருந்து கே.எல். ராகுல் விலகியுள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ராகுல். அதில், "மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். எனக்கு இப்போது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலிருந்து விரைவில் முழுமையாக நான் குணமடைவேன். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் லக்னோ அணியை மேற்கொண்ட வழிநடத்தாமல் செல்வது வறுத்தமாக இருக்கிறது".

மேலும் "இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக குணமடைந்த இந்திய அணியின் ஜெர்சியை அணிய தயாராக இருக்கிறேன். அதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிககர்களுக்கும், கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கும் நன்றி" என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ராகுல்.

இந்நிலையில் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் என்பதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே குருணால் பாண்டியா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். ஒருவேளை அவரையே தொடரச் செய்ய வாய்ப்புள்ளது.