Dhoni
Dhoni Shailendra Bhojak
T20

சேப்பாக்கம் மைதானத்தில் முக்கியமான சாதனையை நிகழ்த்திய தோனி - என்ன அது?

Justindurai S

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , ஆகாஷ் சிங், பதிரனா, தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Chepauk Stasium

பின்னர் 135 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கான்வே 57 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதனால் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 4வது வெற்றியை பெற்றது.

இப்போட்டியில் தோனி ஒரு கேட்சை பிடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை (208) பிடித்த வீரராக தோனி சாதனை படைத்துள்ளார். குவின்டன் டி காக் (207) இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:

208 - எம்எஸ் தோனி

207 - குயின்டன் டி காக்

205 - தினேஷ் கார்த்திக்

172 - கம்ரான் அக்மல்

150 - தினேஷ் ராம்டின்