MS Dhoni
MS Dhoni Twitter
T20

2.2 கோடி ரசிகர்களின் இதயங்களை கட்டிப்போட்ட தோனி! உச்சம் தொட்டது ஜியோசினிமா வியூவர்ஸ் எண்ணிக்கை!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வை அறிவித்து, 2 வருட காலங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் அவரால் பல கோடி ரசிகர்களின் மனதை கட்டிப்போட முடிகிறது. அதற்கு ஒரு சிறந்த உதராணமாக தான், நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி.

dhoni

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் குவாலிட்டி ஸ்பின்னர்களுக்கு எதிராக சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பினாலும், கடைசியாக களத்திற்கு வந்த தோனி தன் அணிக்காக இறுதிவரை போராடினார். ”எப்போதுமே அவர் பினிசர்” தான் என ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், அதை சரிதான் என தன்னுடைய 41 வயதிலும் நிரூபிக்க போராடினார்.

113 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறிய சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை பட்டது. தோனியின் நம்பிக்கை வீரரான ரவீந்திர ஜடேஜா 19ஆவது ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 19 ரன்களை தேற்ற, கடைசி ஓவரை எதிர்கொண்ட எம் எஸ் தோனி, தன்னுடைய பழைய பேட்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்தார். இன்னும் நான் பினிசர் தான் என சிஎஸ்கே ரசிகர்களுகு நம்பிக்கை அளித்த அவர், அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு போட்டியை கிட்டத்தட்ட வெற்றியின் அருகிற்கே எடுத்துச்சென்றார். ஆனால் வெற்றிக்கான நாளாக நேற்று அமையவில்லை.

dhoni - jadeja

போட்டியை வெல்லாத போதிலும், ஐபிஎல் தொடரின் டெலிவிசன் ரைட்ஸ் ஆப்-ஆன ஜியோசினிமா ஆப்பில் ஒரு அற்புதத்தையே நிகழ்த்தியிருந்தார் தோனி. அவர் களத்தில் இருந்த அந்த நேரத்தில் மட்டும், 2.2 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது ஜியோசினிமா. இந்த வியூவர்களின் எண்ணிக்கையானது, “தோனி களத்தில் இருக்கும் வரை போட்டி முடிவுக்கு வரவில்லை” என்னும் நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருப்பதை தான் நேற்று காட்டியது. காலங்கள் கடந்தாலும் பினிசர் என்றால் அது தோனி தான் ரசிகர்களின் மனதில் சென்று சேர்ந்துள்ளதற்கான அத்தாட்சி தான் இந்த வியூவர்களின் எண்ணிக்கை.

இந்நிலையில், தோனி களத்தில் இருந்த போது 2.2 பார்வையாளர்கள் போட்டியை பார்த்தது குறித்து, டிவிட்டரில் பதிவிட்டுள்ளது ஜியோசினிமா. அந்த பதிவில், “ ஒரு கணம் 2.2 கோடி இந்தியர்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திவைத்தனர். பழைய நினைவுகள் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. தோனி களத்தில் இருந்தால், வழக்கமாக உதிக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு எல்லோருக்குள்ளும் உருவெடுத்தது.

Dhoni

அது அவர்களின் நினைப்பு படி முடிவடையவில்லை என்றாலும், ஒரு கணம், எம் எஸ் தோனி என்ற ஒருவர், 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டார்” என்று பதிவிட்டுள்ளது.